5 State Election Results 2022 | விஐபி வேட்பாளர்கள் வெற்றி, தோல்வி நிலவரம்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை காட்டிலும் கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
x
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை காட்டிலும் கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து களம் கண்ட ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவரான சந்திரசேகர் ஆசாத் பின்னுக்கு தள்ளப்பட்டார்.

இதேபோல் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி வாய்ப்பை தன் வசமாக்கினார். சிறையில் இருந்த போதிலும், ராம்பூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட சமாஜ்வாடி மூத்த தலைவரான அசம்கான் இப்போது வெற்றியை தன் வசப்படுத்தி இருக்கிறார். இவர் ராம்பூர் மக்களவை தொகுதியின் எம்.பி.யும் கூட... இதேபோல் அசம்கானின் மகனான அப்துல்லா அசம்கான், சுஹர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை தன் வசமாக்கிக் கொண்டார். பாலியல் வன்முறைக்கு ஆளான உன்னாவ் சிறுமியின் தாய் ஆஷா சிங்கை வேட்பாளராக களமிறக்கியது காங்கிரஸ் கட்சி. ஆனால் உன்னாவ் தொகுதியில் போட்டியிட்ட அவருக்கு சொற்ப வாக்குகள் கிடைக்கவே, தோல்வியை தழுவினார்.

 விவசாயிகள் போராட்டத்தால் கவனம் ஈர்த்த லக்கிம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் யோகேஷ் வர்மாவும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தியோபந்த் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரிஜேஷ் சிங் ராவத்தும் வெற்றி பெற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்