பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனிப்பெரும்பான்மை? - கருத்து கணிப்பு முடிவுகளில் பேரம் என குற்றச்சாட்டு

பஞ்சாப் மக்கள் யாரும் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை நம்புவதாக இல்லை என சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
x
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், சிரோமணி அகாலிதளம் தலைவர்  
சுக்பீர் சிங் பாதல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் குடும்பத்தினருடன் இன்று சிறப்பு வழிபாடு நடத்தினார். 
தற்போது பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுக்பீர் சிங், தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என கொந்தளித்தார். பேரம் பேசி கருத்து கணிப்பு முடிவுகளை ஆம் ஆத்மி தனக்கு சாதகமாகி கொண்டு விட்டதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்