மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் | Manipur Election |

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
x
இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு இன்று மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இன்றுநடைபெற உள்ள வாக்குப்பதிவில் 15 பெண்கள் உள்பட மொத்தம் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்த வேட்பாளர்களில் 39 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள். 5,80,607 ஆண்கள், 6,28,657 பெண்கள் மற்றும் 175 திருநங்கைகள் உட்பட மொத்தம் 12,09,439 வாக்காளர்கள் 1,721 வாக்குச்சாவடிகளில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துகின்றனர் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். கோவிட் தொற்று உள்ள வாக்காளர்கள் கடைசி நேரத்தில், பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாக்களிக்கஅனுமதிக்கப்படுவார்கள். 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்