உ.பி. நான்காம் கட்ட தேர்தல்... 59 தொகுதிகளில் களம் காணும் 624 வேட்பாளர்கள்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று, நான்காம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
x
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று, நான்காம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. லக்கீம்பூர் கீரி, சீதாப்பூர், பிலிபட், உன்னாவ், லக்னோ, ராய்பரேலி, ஃபட்டேபூர், பாண்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 624 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேச சட்ட அமைச்சர் பிரிதேஷ் பதக், அசுதோஷ் டேண்டன், சரோஜினி நகர் தொகுதியில் பாரதிய ஜனதாவின் சார்பாக போட்டியிடும் முன்னாள் அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங், உத்தரப் பிரதேச சட்டப் பேரவை துணை சபாநாயகர் நிதின் அகர்வால் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பலர், இந்த தேர்தல் களத்தில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்