அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பா.ஜ.க. அமைத்துள்ளது: மணிப்பூரில் பிரதமர் மோடி பிரசாரம்

அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பா.ஜ.க. அமைத்துள்ளது: மணிப்பூரில் பிரதமர் மோடி பிரசாரம்
x
மணிப்பூரில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் பாஜக கொண்டுவந்த வளர்ச்சி திட்ட பணிகள் அடுத்த 25 ஆண்டுகளின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்றார். பல ஆண்டுகளாக மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸால் சமத்துவமின்மை இருந்ததாக குறிப்பிட்ட மோடி, காங்கிரஸ் ஆட்சியில் போராட்டங்களை மட்டுமே நடைபெற்றதாக தெரிவித்தார். மேலும், இளைஞர்கள் மற்றும் முதல் வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தி பாஜகவை வெற்றிப்பெற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்