நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்தும்,. மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரியும், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திமுக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்களும் பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை இந்தப் பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற எம்.பிக்கள், 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெறவும் வலியுறுத்தினர்.
Next Story