அஞ்சலக வங்கி மூலம் உதவித்தொகை - முடிவை கைவிட வைகோ வேண்டுகோள்

அரசின் நலத்திட்ட உதவித் தொகை வழங்குவதை அஞ்சலக வங்கிக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்
அஞ்சலக வங்கி மூலம் உதவித்தொகை - முடிவை கைவிட வைகோ வேண்டுகோள்
x
அரசின் நலத்திட்ட உதவித் தொகை வழங்குவதை அஞ்சலக வங்கிக்கு மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை தற்போது பார்க்கலாம். மாநிலம் முழுவதும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் 12 ஆயிரம் பேர்  வணிகத் தொடர்பாளர்களாக பணியாற்றி வருவதாகவும் வங்கிகள் அளிக்கும் ஊக்கத் தொகை மட்டுமே வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வாழ்வாதாரம் என்ற நிலையில், கிராமப்புற  மக்களுக்கான வங்கிச் சேவைகள் அனைத்தும், இவர்கள் மூலம் மிக எளிதாக கிடைப்பதையும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆதார் எண் இணைக்கும் பணி, ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, கொரோனா நிவாரண உதவித்தொகை, கிசான் திட்டம் என மக்களுக்கு அனைத்து உதவித்திட்டங்களும் வீடு தேடி சென்று  இவர்கள் மூலமாகவே தடையின்றி கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எளிதாக மக்களுக்கு உதவித் தொகை கிடைப்பதை பாதிக்கும் வண்ணம், அரசின் உதவித் தொகையினை வழங்குவதற்கு, இந்திய அஞ்சலக வங்கிக்கு மாற்றும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்