கே.டி. ராகவன் குறித்து சர்ச்சை வீடியோ - மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை
கே.டி. ராகவன் மீதான புகாரை அவர் சட்டப்படி சந்திப்பார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக நிர்வாகியான கே.டி.ராகவன் குறித்து சர்ச்சை வீடியோ வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இதை ஏற்றுக் கொண்டதாக அறிக்கை வெளியிட்டுள்ள மாநிலத் தலைவர் அண்ணாமலை, இதுகுறித்து விசாரிக்க நிர்வாகி மலர்கொடி தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார். மேலும், வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை அறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாஜகவில் பொறுப்பு, நிர்வாகத்தில் உள்ள பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் உள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து முன்னதாக தன்னை சந்தித்த யூடியூபர் மதன், வீடியோ காட்டாமல் புகார் கூறியதாக தெரிவித்த அண்ணாமலை, வீடியோ விவகாரத்தை கே.டி.ராகவன் சட்டப்படி சந்திப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story