ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணி : "பாமக சார்பில் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை" - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பாமக சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அளிக்கப்படும் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு பாமக சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையாக அளிக்கப்படும் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கலங்கியது மிகவும் வேதனை அளிப்பதாகவும், போட்டியில் தோற்றாலும், அவர்கள் இந்தியர்களின் இதயங்களை வென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தோல்விக்காக கண்ணீர் விட வேண்டாம் என்று தெரித்துள்ள அவர், மகளிர் ஹாக்கி அணியினர் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story