மத்திய செயலக திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி
மத்திய செயலக திட்டம் குறித்து மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விரிவான பதிலளித்துள்ளார்.
மத்திய செயலக திட்டம் குறித்து மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விரிவான பதிலளித்துள்ளார்.திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று மக்களவையில், மத்திய செயலகத் திட்டத்தை சிறு சிறு திட்டங்களாகப் பிரித்து தடையில்லா சான்றிதழ்கள் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதா என்றும், சுற்றுச் சூழல் அனுமதி பெறப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான சுற்றுச் சூழல் அனுமதி கடந்த ஆண்டு ஜூலை 17ம் தேதியே பெறப்பட்டது என்று தெரிவித்தார். மேலும், மத்திய செயலக திட்டம் உள்ளிட்ட சிறு சிறு திட்டங்களுக்கான சுற்றுச் சூழல் அனுமதி கடந்த மே மாதம் 31ம் தேதி பெறப்பட்டதாகக் கூறினார். அத்துடன் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக நடத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், நிபுணர் குழுவின் பரிந்துரையுடன் கடந்த மே 21ல் சுற்றுச் சூழல் அனுமதி பெறப்பட்டதாகவும் ஹர்தீப் சிங்க் பூரி பதிலளித்துள்ளார்.
Next Story