ராஜினாமா செய்ய தயார்-கர்நாடகா முதல்வர் எடியூரப்பா
பாஜக தலைமை கூறினால், பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ராஜினாமா செய்ய தயார்-கர்நாடகா முதல்வர் எடியூரப்பா
பாஜக தலைமை கூறினால், பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான கர்நாடக முதலமைச்சராக உள்ள எடியூரப்பா, கட்சி மேலிடம் கூறினால், ராஜினாமா செய்ய தயார் என கூறியுள்ளார். அரசின் செயல்பாடுகளில், அவரது மகன் தலையீடு அதிகம் உள்ளதாக, பாஜக தலைமைக்கு தொடர் புகாரனுப்பிய எம்.எல்.ஏ.க்கள், எடியூரப்பா ராஜினாமா செய்யக் கோரினர்.இதனிடையே, அண்மையில் டெல்லி சென்ற எடியூரப்பா, பாஜக தேசிய தலைவர் மற்றும் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, முதல்வர் மாற்றம் குறித்து பேசவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.இதைத் தொடர்ந்து, பாஜக பிரமுகர்கள், லிங்காயத்து சமூகத்தினர், மடாதிபதிகள் உள்ளிட்டோர் எடியூரப்பாவை தொடர்ந்து சந்தித்தனர். இதனிடையே, பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, வரும் 25ஆம் தேதிக்கு பிறகு பாஜக மேலிடத்தின் சொல்படி நடக்க உள்ளதாக கூறினார். 26ஆம் தேதி அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே, மொத்தம் உள்ள 224 இடங்களில், பாஜக 119, காங்கிரஸ் 68, மதசார்பற்ற ஜனதா தளம் 32, சுயேட்சைகள் 3 பேர் உள்பட 222 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2 இடம் காலியாக உள்ளது.
Next Story