கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரசில் 170 எம்.எல்.ஏ.க்கள் விலகல்

கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் சமயத்தில் காங்கிரசில் இருந்து 170 எம்.எல்.ஏ.க்கள் விலகி பிற கட்சிகளில் இணைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் காங்கிரசில் 170 எம்.எல்.ஏ.க்கள் விலகல்
x
கடந்த 5 ஆண்டுகளில் தேர்தல் சமயத்தில் காங்கிரசில் இருந்து 170 எம்.எல்.ஏ.க்கள் விலகி பிற கட்சிகளில் இணைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

கடந்த 2016 முதல் 2020 வரையில் 5 ஆண்டுகளில் கட்சி மாறி போட்டியிட்ட 433 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வு முடிவை ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ளது.அதில், 5 ஆண்டுகளில் 405 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களில் 170 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து வெளியேறியவர்கள் என்றும் பாஜகவில் இருந்து 18 பேர் மட்டுமே வெளியேறி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருக்கும் கட்சியிலிருந்து வெளியேறிய 405 எம்.எல்.ஏ.க்களில் 182 பேர் பா.ஜனதாவிலும், 38 பேர் காங்கிரசிலும், 25 பேர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியிலும் சேர்ந்துள்ளனர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது 12 எம்.பி.க்கள் கட்சி மாறி போட்டியிட்டனர் என்றும் அவர்களில் 5 பேர் பாஜவில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதே காலக்கட்டத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கள் 16 பேர் கட்சி மாறி போட்டியிட்டுள்ளனர் என்றும் அவர்களில் 7 பேர் காங்கிரசில் இருந்து வெளியேறியவர்கள் என்றும் 10 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால்தான், மத்தியபிரதேசம், மணிப்பூர், கோவா, அருணாசலபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அரசுகள் கவிழ்ந்தன எனவும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்