குறை சொல்ல பூதக்கண்ணாடி தேவையில்லை : கட்டடங்கள் இடிந்தால் அது அதிமுக ஆட்சி - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
விழுப்புரம் அருகே தடுப்பணை இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் அருகே தடுப்பணை இடிந்து விழுந்த சம்பவத்தில் ஒப்பந்ததாரர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரசார கூட்டம் விழுப்புரம் மாவட்டம் குப்பம் ஊராட்சி காணை குப்பம் ஊராட்சியில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடினார். பின்னர் பேசிய அவர், கட்டடங்கள் இடிந்து விழுந்தால் அது பழனிச்சாமி ஆட்சி என்றும், திமுக ஆட்சி அமைந்த உடன் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார். தன் பதவியை பயன்படுத்தி விழுப்புரம் மாவட்டத்திற்கு என்ன செய்தீர்கள் என கேட்டதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் இதுவரை பதில் சொல்லவில்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்
Next Story