சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை - நாடித்துடிப்பு விகிதம் மற்றும் ரத்த அழுத்தம் சீராக உள்ளது.
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா, சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். கொரோனா உறுதியானதால் சசிகலா 10 நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.சசிகலாவுக்கு தற்போது காய்ச்சல் இல்லை. நாடித்துடிப்பு விகிதம் மற்றும் ரத்த அழுத்தம் சீராக உள்ளது. நுரையீரல் தொற்றை தவிர மற்ற அனைத்தும் சீராக காணப்படுகிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்படி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவ குழுவினர் சசிகலாவின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.
Next Story