முறையற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் - நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் குற்றச்சாட்டு

முறையற்ற ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளால் மதுரையில் காற்று மாசு சென்னையை விட அதிகமாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
முறையற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் - நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் குற்றச்சாட்டு
x
முறையற்ற ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளால் மதுரையில் காற்று மாசு சென்னையை விட அதிகமாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான தலைமை நியமிக்கப்படாமலும், மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்காமல் பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். மேலும்,  இந்த பணிகளை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடிக்காததால் காற்று மாசு ஏற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.மேலும், ஸ்மார்ட்சிட்டி திட்ட நிதிகளிலிருந்து சேமிக்கப்படும் நிதியை மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்