"இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்" - விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால்,காற்றில் கார்பன் மாசு, 35 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க  திட்டம் - விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
x
குஜராத் மாநிலம், காந்திநகரில் உள்ள பண்டித தீன்தயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவில் காணொலி வாயிலாகக் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் 45 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய ஒளி மின்சக்தியைத் தயாரிக்கும் ஆலை மற்றும் நீர் மேலாண்மை மையம் ஆகியவற்றிற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பின்னர், தொழில்நுட்ப தொழில்களுக்கு வழிபடுவதற்கான மையம்', 'மொழிபெயர்ப்பு ஆராய்ச்சி மையம்' மற்றும் 'விளையாட்டு வளாகம்' ஆகியவற்றை காணொலி மூலம் பிரதமர் திறந்து வைத்தார். விழாவில் பேசிய பிரதமர் மோடி, இயற்கை எரிவாயு பயன்பாட்டை, அதிகரிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில், பொறுப்புடன் செயல்பட்டால், வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும் என, பிரதமர் மோடி  தெரிவித்தார். 




Next Story

மேலும் செய்திகள்