ஹசிரா - கோகா இடையே நீர்வழி கப்பல் போக்குவரத்து சேவை - பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார்
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இனி துறைமுகங்கள் கப்பல் நீர்வழி போக்குவரத்து துறை என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இன்று ஹசிரா மற்றும் கோகாவுக்கு இடையே நீர்வழி கப்பல் போக்குவரத்து சேவையை துவக்கி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நீர்வழி போக்குவரத்தின் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்கான செலவை வெகுவாக குறைக்க முடியும் என்றார். சரக்குகளின் தங்கு தடையற்ற போக்குவரத்துக்கு உகந்த சுற்று சூழலை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இனி மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து துறை என பெயர் மாற்றம் செய்யப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
============
Next Story