சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அதிரடி
சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வலுவான தூண்களாக இருந்த சிவசேனா கூட்டணியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டது என்றும், தற்போது அகாலி தளத்துக்கு அந்த நிலை ஏற்பட்டு கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளதாக சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டி உள்ளார். பா.ஜ.க. அணியில் தற்போது புதிதாக சில கட்சிகள் வந்து உள்ளதாகவும், அவர்களுக்கு நல்லதே நடக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார். தேவேந்திர பட்னாவிசை நேற்று சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், அவருடன் சில பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசித்ததாக தெரிவித்தார். அவர் முன்னாள் முதலமைச்சர் , தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், பீகார் மாநில தேர்தல் பொறுப்பாளர் என பல நிலையில் பட்னாவிஸ் உள்ளதாக சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டினார். தத்துவார்த்த ரீதியாக தங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டே தவிர, நாங்கள் எதிரிகள் அல்ல என்றும், தங்களின் சந்திப்பு குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவார் என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
Next Story