ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். அதன்படி, கோதுமை, கடுகு, பார்லி உள்ளிட்ட 6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோதுமை ஒரு குவிண்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டு1975 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னா தால் குவிண்டாலுக்கு 225 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், கடுகு ஒரு குவிண்டாலுக்கு 225 ரூபாயும் பார்லே ஒரு குவிண்டாலுக்கு 75 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை நிறுத்தப்படாது எனவும் நரேந்திர சிங் தோமர் உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்