தொகுதி மக்களுக்கு மருத்துவ சோதனை - எம்.பி ராகுல்காந்தி நேரில் கண்காணிப்பு

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, தனது சொந்த தொகுதி மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்தார்.
தொகுதி மக்களுக்கு மருத்துவ சோதனை - எம்.பி ராகுல்காந்தி நேரில் கண்காணிப்பு
x
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, தனது சொந்த தொகுதி மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்தார். சாலை, போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில் வசிக்கும் பழங்குடியினர் பகுதிக்கு ஜீப்பில் சென்று, அந்த மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பைக் ரேஸ் தொடர்பாக இளைஞர்கள் மோதல் - மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை


அரியானா மாநிலம் குருகிராம் அருகே பைக் ரேஸ் தொடர்பான மோதலில் மூன்று பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலையாளிகள் விட்டு சென்ற பைக், சில தடயங்களை சேகரித்தனர். சம்பவத்தின் போது சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் - துணை முதல்வர் கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ் நேரில் ஆய்வு


ஆந்திர மாநிலம் மேற்குகோதாவரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் துணை முதலமைச்சர் அல்லா கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். படகு மூலம் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு நேரடியாக சென்று, அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களின் தேவையை உடனடியாக நிறைவேற்ற ஆட்சியருக்கு துணை முதலமைச்சர் அல்லா கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ் உத்தரவிட்டார்.

கங்சபதி அணையில் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


மேற்குவங்க மாநிலத்தில் பெய்த கனமழையால், கங்சபதி அணை நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர் திறப்பு காரணமாக கங்சபதி கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தாழ்வான இடத்தில் உள்ள மக்கள் வெளியேறவும் பாங்குரா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மழையால் நிரம்பி வழியும் சரயு நதி - தாழ்வான குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம்

அயோத்தி சரயுநதியில் அபாய வளைதாண்டி பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், தாழ்வான குடியிருப்பு பகுதியை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர். புராபஜார், முடதிஹா,சங்கிராம்  உள்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளத்தல் மிதக்கின்றன. தங்களுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர் மழையால் கங்சபதி நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வு - 5,000  கனஅடி நீர் வெளியேற்றம்

மேற்கு வங்க மாநிலம், முகுத்மனிபூரில் உள்ள கங்சபதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்மழையில் முக்கிய முகுத்மனிபூரில் உள்ள கங்சபதி நீர்த்தேக்கம் முழு அளவை எட்டி வருகிறது. இதனால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து, 5 ஆயிரம்  கனஅடி நீர்  வெளியேற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்