"எம்பிக்கள் 24% பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன"
நாட்டில் உள்ள 229 மாநிலங்களவை உறுப்பினர்களில் 54 பேர் அதாவது 24 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
நாட்டில் உள்ள 229 மாநிலங்களவை உறுப்பினர்களில் 54 பேர் அதாவது 24 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஏடிஆர் என்ற அமைப்பு 229 மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டு சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில், 229 மாநிலங்களவை உறுப்பினர்களில் 54 பேர், 24 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இவற்றில் 12 சதவீதமான 28 மாநிலங்களவை உறுப்பினர்கள் மீது, தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
229 மாநிலங்களவை உறுப்பினர்களில், 89 சதவீதமான, 203 பேர் கோடீஸ்வரர்கள்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேர் கோடீஸ்வரர்கள். அதிமுக உறுப்பினர்களில் 9 பேர் கோடீஸ்வரர்கள்.
பாஜகவின் 77 மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த சராசரி சொத்து மதிப்பு ரூ. 27.74 கோடியாக ஆக உள்ளதாக தெரியவந்துள்ளது.
Next Story