"டோக்கன் இல்லாவிட்டால் மது இல்லை" - மதுப்பிரியர்களுக்கு கேரள அரசு திட்டவட்டம்

கேரள மாநிலத்தில், இரண்டு மாதங்களுக்கு பிறகு, கடும் நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
x
4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கேரள அரசு ஆன்லைனில் டோக்கன் பெற பெவ்கியூ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, மதுவாங்க விரும்புவோரின் பெயர், முகவரியை பதிவு செய்தால், வரிசை எண், மதுவாங்கும் நேரம் உள்ளிட்ட விவரங்களுடன் க்யூ ஆர் கோடு டோக்கன் வழங்கப்படுகிறது. கடைக்கு சென்று டோக்கனை காட்டுபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படுகிறது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை டோக்கனை பெறலாம் என்றும் ஒரே நேரத்தில் 5 நபர்கள் மட்டுமே வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கேரள அரசு கூறியுள்ளது. மேலும், இன்று மதுவாங்குபவர்கள், மீண்டும் நான்கு நாட்களுக்கு பிறகு தான் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்