சுயசார்பு திட்டத்தின் 2 ஆம் கட்ட புதிய அறிவிப்புகள்
பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டமான 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டத்தின், 2 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்
பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டமான 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டத்தின், 2 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்
* சுமார் 3 கோடி விவசாயிகளுக்கு , 4.22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு வழங்கி 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி தரப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
* விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப் படுவதாகவும், கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30 தேதி வரை 86 ஆயிரம் கோடி அளவுக்கு 63 லட்சம் கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்
* சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுவதாகவும் , நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 29 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
* விவசாய கொள்முதலுக்காக 6ஆயிரத்து 700 கோடி ரூபாயும் , மாநில பேரிடர் நிவாரண நிதியாக 11 ஆயிரம் கோடி ரூபாயும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்
* புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, அவர்கள் கிராமங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்க 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு இரண்டு மாதங்கள் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்க 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
* ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் அடுத்த ஆண்டு மார்ச் மாத த்திற்குள் 23 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார் .
* தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை குடியமர்த்த குடியிருப்புகளை கட்ட அரசு ஊக்கத்தொகை வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்
* சிறு வணிகர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 1.62 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் எனவும் கடனை முறையாக செலுத்தும் சிறு வணிகர்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.
* 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான முத்ரா கடன்களுக்கு 2 சதவீதம் வட்டி குறைக்கப்படுவதாகவும் , இதன் மூலம் 3 கோடி சிறு வணிகர்கள் பயன்பெறுவார்கள் என்றும் நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
* சாலையோர வியாபாரிகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதி உதவியாக தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்
* நகரங்களில் உள்ள பயன்படாத அரசு கட்டிடங்கள் , அரசு - தனியார் பங்களிப்புடன் , புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மலிவு வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.
* கிசான் கார்ட் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு அதில் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
Next Story