"கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வெளிப்படைத்தன்மை தேவை" -சமூக ஊடகங்கள் வாயிலாக ராகுல்காந்தி பேட்டி
மத்திய அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை தேவை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை தேவை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடகங்கள் வழியாக அவர் அளித்த பேட்டியில் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளை நாம் தொடங்க வேண்டிய தேவை உள்ளது என வலியுறுத்தினார். இதில் ஏற்படும் தாமதம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமர் அலுவலகத்துக்குள் மட்டும் வைத்துக் கொண்டால் தோல்வியை தழுவ நேரிடும் என்றும், முடிவெடுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க பிரதமர் முன்வரவேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
Next Story