தொழில்நிறுவனங்களை ஈர்க்க இந்தியா திட்டம் - தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்க பிரதமர் வலியுறுத்தல்

கொரோனா நோய் தாக்கத்தினால், உலகப் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ள நிலையில், சீனாவில் இருந்து வெளியேறும் தொழில்நிறுவனங்களை ஈர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
தொழில்நிறுவனங்களை ஈர்க்க இந்தியா திட்டம் - தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்க பிரதமர் வலியுறுத்தல்
x
சரக்கு மற்றும் விமான போக்குவரத்துகள் முடங்கியுள்ளதால், சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், உதிரி பாகங்கள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

சீன உதிரிபாகங்களை நம்பி இருந்த நிறுவனங்களின் செயல்பாடுகள், பல நாடுகளிலும் முழுமையாக முடங்கியுள்ளன.

இந்த நிலையில், சீனாவில் உற்பத்தி மையங்களை வைத்துள்ள ஜப்பானிய நிறுவனங்கள், தங்கள் நாட்டிற்கு மாற்றிக் கொள்ளுமாறு  அந்த நாடு கேட்டுக் கொண்டுள்ளது. அதற்காக ஜப்பானிய நிறுவனங்களுக்கு  24 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மானியம் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்து வந்த சீனாவிற்கு, இந்த ஆண்டின் 10  சதவீதத்துக்கு மேல் அந்நிய முதலீடு குறைந்துள்ளது. இது மேலும் குறையலாம் என்று கருதப்படுகிறது. 

இந்த நிலையில், சீனாவில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள், அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளதுடன், அவை இந்தியாவில் தொழில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிற்து.

இதையடுத்து, தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்குமாறும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தேவையான திட்டங்களை வடிவமைக்கும் படி  மாநில முதல்வர்களுக்கு  பிரதமர் மோடி வலியுறுத்து உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்