"முதலீடுகளை ஈர்க்க உடனடி நடவடிக்கை தேவை" - பிரதமர் மோடி வலியுறுத்தல்
முதலீடுகளை ஈர்க்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி டெல்லியில் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்க்க உடனடி நடவடிக்கை தேவை என பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்கு வேகமாக தீர்வு காணவும், தேவையான ஒப்புதல்களை உடனுக்குடன் அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
தொழில்துறை ஊக்கம் பெறவும், அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவும் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
Next Story