இன்று சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டம் - கொரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசனை
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தெற்காசிய நாடுகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான தெற்காசிய நாடுகளின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. உலகம் முழுவதும் கொரோனா ரைவஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ளும் வகையில் சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த ஆலோசனைக்கு சார்க் நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டம் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என கூறப்படுகிறது.
Next Story