காங். எம்.எல்.ஏக்கள் 20 பேர் ராஜினாமா - ம.பியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல்
மத்தியப்பிரதேசத்தில் ஆறு அமைச்சர்கள் உள்பட 20 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் ஆறு அமைச்சர்கள் உள்பட 20 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரும், தங்களது ராஜினாமா கடிதத்தை, மத்தியப்பிரதேச ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து 20 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 101 ஆக குறைந்துள்ளது.
Next Story