காங்.கட்சியில் இருந்து விலகிய ஜோதிர்ஆதித்யா சிந்தியா - ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பினார்
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ஜோதிர்ஆதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிர்ஆதித்ய சிந்தியா, அதிருப்தி நிலவியதையடுத்து, டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். பின்னர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக சோனியா காந்திற்கு ஜோதிர் ஆதித்யாசிந்தியா கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மக்கள் சேவை செய்ய முடியவில்லை என்பதால் வெளியேறுவதாக, ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா நீக்கம்
இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை, காங்கிரஸ் கட்சி நீக்கியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜோதிர் ஆதித்ய சிந்தியா கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் நீக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Next Story