மத்திய பிரதேசத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அரியானாவுக்கு கடத்தல்? - காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல்

மத்திய பிரதேசத்தில் 8 எம்.எல்.ஏ.க்கள் அரியானாவுக்கு கடத்தப்பட்டதாக வெளியான தகவலால் ஆளும் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அரியானாவுக்கு கடத்தல்? - காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல்
x
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 231 தொகுதிகளில் 114 தொகுதிகளில் காங்கிரசும், 109 தொகுதிகளில் பா.ஜ.கவும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளின் தலா இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸ்  கட்சியை சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் என 8 எம்.எல்.ஏ.க்கள் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அவர்களை மீட்க மத்திய பிரதேச  அமைச்சர்கள் சிலர் குர்கான் விரைந்துள்ளனர். இந்நிலையில்,  8 எம்.எல்.ஏ.க்கள் கடத்தலால் கமல்நாத் ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மாநிலங்களவை தேர்தலில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை  25 கோடி ரூபாய் பேரம் பேசி இழுக்க பா.ஜ.க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்