"டெல்லி வன்முறை, கொரோனா பரவல் குறித்து பேசினோம்"- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்
பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால், கொரோனா வைரசை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறினார். டெல்லி வன்முறை போல், வேறு எதுவும், நிகழ கூடாது என்றும், வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் பாராட்டத்தக்கது என்றும் கெஜ்ரிவால் புகழாரம் சூட்டினார்.
Next Story