"தலைவராக பணம், ஜாதி, மதம் போன்ற வழிகளை கையாள்கின்றனர்" - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு

தலைவர் ஆக வேண்டும் என்பதற்காக, பணம், ஜாதி, மதம் போன்ற வழிகளை சிலர் கையாள்வதாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
தலைவராக பணம், ஜாதி, மதம் போன்ற வழிகளை கையாள்கின்றனர் - குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு குற்றச்சாட்டு
x
சென்னை ஐ.ஐ.டியில், இளம் தலைமுறையின் பத்தாண்டிற்கான பார்வை'' என்ற தலைப்பில், கருத்தரங்கு நடந்தது.  அதில் பேசிய  குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு , சமுதாயத்தில் சில பேர் நல்ல வழிகள் மூலமாக மக்களை திரட்ட முடியாததால் சாதி, மதம் மூலம் மக்களை திரட்டுகின்றனர் என்று வேதனை தெரிவித்தார். விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என்றும், அதனை லாபகரமாக மாற்றும் தொழில்நுட்பங்களை ஐ ஐ டி போன்ற நிறுவனங்கள் கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். சென்னை போன்ற நகரங்களில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து, அழித்ததால் வெள்ளம் ஏற்பட்டது என்று குறிப்பிட்ட வெங்கையா நாயுடு, நீர்நிலைகளை பாதுகாத்து தண்ணீர் சேமிக்கும் வழிமுறைகளை தீவிரமாக கண்டறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்