கன்னையா குமார் மீதான தேசத் துரோக வழக்கு - அனுமதி வழங்கிய டெல்லி அரசுக்கு சிதம்பரம் கண்டனம்
தேசத்துரோக சட்டத்தைப் புரிந்துகொள்வதில் மத்திய அரசை போல் டெல்லி அரசும் தவறிவிட்டதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
தேசத்துரோக சட்டத்தைப் புரிந்துகொள்வதில் மத்திய அரசை போல் டெல்லி அரசும் தவறிவிட்டதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராக முழங்கமிட்டதாக முன்னாள் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் தலைவரான கன்னையா குமார் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு தற்போது டெல்லி அரசு அனுமதி அளித்துள்ளதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து, தனது சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
Next Story