"5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய பட்ஜெட் உதவிடும்" - பிரதமர் மோடி பெருமிதம்
ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய மத்திய பட்ஜெட் உதவிடும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எளிதில் அடையக்கூடிய இலக்கு அல்ல என்றாலும் அடையக்கூடியது தான் என்றார். மேலும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் உதவும் என மேலும் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் தற்போது 3 டிரில்லியன் டாலராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதை அடைய 70 ஆண்டுகள் ஆகி உள்ளதாக தெரிவித்தார். அதே சமயம் இதுகுறித்து கேள்வி எழுப்பாமல், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக நிர்ணயித்தால் அது குறித்து கேள்வி கேட்கப்படுவதாக அவர் கூறினார். இந்த பொருளாதார இலக்கை அடைய, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி மிக முக்கியம் என குறிப்பிட்ட அவர், அதை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story