டெல்லி சட்டப்பேரவை கட்டிடம் உருவான கதை
டெல்லி சட்டப்பேரவை கட்டிடம் உருவான விதம் குறித்த செய்தி தொகுப்பு
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1911 ஆம் ஆண்டு வரை நாட்டின் தலைநகராக கொல்கத்தா இருந்தது. அதுவரை அந்நகரில் இருந்த அரசு இல்லத்தில்தான் அன்றைய நாடாளுமன்ற கவுன்சில் கூட்டம் நடைபெற்று வந்தது.
* ஹிந்து -முஸ்லிம் ஒற்றுமைக்கான பழம்பெரும் பாரம்பரியத்திற்காகவும், புவியியல் ரீதியாக கேந்திரமான பகுதியாகவும் டெல்லி அமைந்ததால் அதை நாட்டின் தலைநகராக மாற்றியமைத்தனர் ஆங்கிலேயர்கள்.
* இதைத்தொடர்ந்து டெல்லியில் நாடாளுமன்ற கவுன்சில் கூட்டத்தை நடத்த ஒரு கட்டடம் தேவைப்பட்டது. இதை வடிவமைக்கும் பொறுப்பு மான்டேக் தாமஸ் இடம் அளிக்கப்பட்டது.
* பழைய தலைமைச் செயலகம் என அழைக்கப்படும், அலிப்பூர் சாலையில் அமைந்துள்ள தற்போதைய டெல்லி சட்டப்பேரவை கட்டடம், 1912-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, முதல் கூட்டம் 1913 ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி நடைபெற்றது.
* 1926-ஆம் ஆண்டு வரை அப்போதைய மத்திய அரசின் கவுன்சில் கூட்டம் இன்றைய சட்டப் பேரவை கட்டடத்தில் தான் நடைபெற்றது.
* 1912- ஆம் ஆண்டு தொடங்கி 1920-ஆம் ஆண்டு வரை இருந்த ஆங்கிலேயே சட்டப்பேரவை கவுன்சில் கூட்டம், இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டடத்தில் தான் நடைபெற்றது.
* அன்றைய காலகட்டத்தில்தான், பட்ஜெட், ரயில் கட்டணம், ரயில்வே சீர்திருத்தம் போன்ற முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
* ரௌலட் மசோதா தொடர்பான விவாதத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற நாடாளுமன்றவாதிகள் பங்கேற்று, ரௌலட் மசோதா, தனிநபரின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என முழக்கமிட்டு உரையாற்றினர்.
* அப்போது இந்த விவாதத்தை மாடத்திலிருந்து பார்ப்பதற்காக மகாத்மா காந்தி வந்திருந்தார்.
* தற்போது உள்ள நாடாளுமன்றம், கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பழைய தலைமைச் செயலக கட்டடம் நீண்ட காலம் பயன்பாடற்று இருந்தது. டெல்லி சி பிரிவு மாநிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் கட்டடம் செயல்பாட்டுக்கு வந்தது.
* 1993-ஆம் ஆண்டு தொடங்கி டெல்லி சட்டப்பேரவை இந்த பழைய தலைமைச் செயலக கட்டடத்தில் தான் நடைபெற்று வருகிறது.
* 1912-ஆம் ஆண்டு தொடங்கி 1926-ஆம் ஆண்டு வரை, அப்போதைய மத்திய அரசின் அதிகார மையமாகவும், நாடாளுமன்றமாகவும் இப்போது உள்ள சட்டப்பேரவை கட்டடம் செயல்பட்டது.
* வரலாற்று சிறப்புமிக்க டெல்லி சட்டப்பேரவையின் தற்போதைய செயலாளராக, தமிழரான சி. வேல்முருகன் பணியாற்றி வருகிறார்.
Next Story