2020 - 21 பட்ஜெட் ஒரு பார்வை...

2020 பட்ஜெட்டில், வரிகள் தொடர்பாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள்.
2020 - 21 பட்ஜெட் ஒரு பார்வை...
x
2020 ஆம் ஆண்டில் பணவீக்கத்தை உள்ளடக்கிய 10 சதவீத வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். 

* ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி கிடையாது என்றும், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5 சதவீத வருமான வரி விதிக்கப்படும் என்றும், நிதியமைச்சர் அறிவித்தார். 

* ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாயிலிருந்து, ஏழரை லட்ச ரூபாய் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வருமான வரி எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். 

* நடப்பாண்டில் இருந்து ஏற்றுமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். 

* பான் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக புதிய கார்டுகள் வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

* அனைவருக்குமான வீட்டுக்கடன் திட்டங்களுக்கான கடன் காலம் மேலும் நீட்டிக்கப்படும்

* புதிய மின் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கினால் 15% வரி விதிக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 



Next Story

மேலும் செய்திகள்