தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
இந்திய தொழில் கூட்டமைப்பின் 125 வது ஆண்டின் துவக்க விழா சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இதனால் தொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 59 திட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டதாக சுட்டிக்காட்டிய அவர் . மேலும் 213 தொழிற் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாக கூறினார். இதன்மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
Next Story