"கோட்சே, நரேந்திர மோடி ஒரே தத்துவத்தை நம்புபவர்கள்" - ராகுல்காந்தி

யார் இந்தியன் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்தது யார்? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்சே, நரேந்திர மோடி ஒரே தத்துவத்தை நம்புபவர்கள் - ராகுல்காந்தி
x
கேரள மாநிலம் வயநாட்டில் அரசியல் சாசனத்தை காக்க வலியுறுத்தி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி பங்கேற்றா​ர். பேரணியின் நிறைவில் பேசிய ராகுல் காந்தி, நாதுராம் கோட்சேவும் நரேந்திர மோடியும் ஓரே தத்துவத்தை நம்புபவர்கள் என்றும் கோட்சேவை நம்புவதை வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லாத ஒன்றை தவிர இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என தெரிவித்தார். 

வேலை வாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்து கேள்வி எழுப்​பினால் உடனே பிரதமர் மோடி திசை திருப்புவார் என்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் வேலை வாய்ப்பை உருவாக்காது என்றும் ராகுல் காந்தி கூறினார்.  

காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலத்தில் போராட்டம் தொடர்ந்து வருவதாகவும் அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு வழியில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். 

தற்போது நாட்டு மக்கள் தங்களை இந்தியர்கள் என நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் நான் இந்தியன் என்பதை முடிவு செய்வதற்கு மோடி யார் என்றும் கேள்வி எழுப்பிய ராகுல்காந்தி யார் இந்தியர் யார் இந்தியர் அல்லாதவர் என முடிவு செய்யும் அதிகாரத்தை மோடிக்கு யார் கொடுத்தார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்