யார் இந்த ஜே.பி.நட்டா?

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெ.பி. நட்டா என்றழைக்கப்படும் ஜகத் பிரகாஷ் நட்டா குறித்து விரிவான தகவல்
x
ஜகத் பிரகாஷ் நட்டா 1960 ஆம் ஆண்டு, டிசம்பர் 2ஆந் தேதி பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் பிறந்தவர். 

இவரது  தந்தை என்.எல்.நந்தா, பாட்னா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக பணியாற்றியவர். பாட்னாவில் புனித சேவியர் பள்ளியில் கல்வி 
பயின்ற ஜகத் பிரகாஷ் நட்டா பாட்னா கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.  

பின்னர்  இமாசல பிரதேச பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி  படித்து, சட்டத்தில் பட்டம் பெற்றார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இமாசல பிரதேச மாநில சட்டசபை உறுப்பினராக 1993 - இல் முதன் முதலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற பாஜக தலைவராக செயல்பட்டார்.  

1998 இல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டு,  இமாச்சல் பிரதேச சுற்றுச்சூழல் துறை, காடுகள், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கான அமைச்சராக செயல்பட்டார்.

பின்னர்  நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பியாக 2012 - இல், இமாச்சல பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.   

பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக 2014 நவம்பர் 9ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

2019 ஜூன் 17 இல் பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

பாரதிய ஜனதாவின் மிக நீண்ட ஆண்டுகளாக தலைவராக செயல்பட்டவர் எல்.கே.அத்வானி.  மொத்தம் 11 ஆண்டுகள் அவர் தேசிய தலைவராக செயல்பட்டு உள்ளார்.

பாரதிய ஜனதாவின் தலைவர் பொறுப்பை வகித்தவர்களில் வாஜ்பாய் மட்டுமே பிரதமர் பொறுப்பையும் வகித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது... 

Next Story

மேலும் செய்திகள்