"குடியுரிமை திருத்த சட்டத்தில் அரசியல் செய்கின்றனர்" - ஹவுரா பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரை
குடியுரிமை திருத்த சட்டத்தில் சிலர் அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தில் சிலர் அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். கொல்கத்தாவுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள மோடி, ராமகிருஷ்ண பரமஹம்சர் மடத்தில் வழிபட்டபின்னர், பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், மக்களை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர் என்று கூறினார். யாரொருவரின் குடியுரிமையையும் மாற்றுவதற்காக கொண்டுவரப்படவில்லை என்றும், மாறாக அளிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறினார். பாகிஸ்தானில் இருந்து வந்த மத சிறுபான்மையினருக்கு குடியிரிமை அளிக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் கனவு என்றும் மோடி குறிப்பிட்டார்.
Next Story