"மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டம், குடியுரிமை திருத்த சட்டம்" - சோனியா காந்தி பேச்சு
மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டம் குடியுரிமை திருத்த சட்டம் என சோனியா காந்தி கூறியுள்ளார்.
மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் பாரபட்சமான சட்டம் குடியுரிமை திருத்த சட்டம் என சோனியா காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்பர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சோனியாகாந்தி, குடியுரிமை திருத்த சட்டம் இந்திய மக்களை மத அடிப்படையில் பிரிப்பதாக விமர்சித்தார். சமத்துவம், நீதி, கண்ணியத்திற்காக மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் தோள் கொடுக்கும் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டார். இதனிடையே, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறைகள் குறித்து ஆராய காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை சோனியா காந்தியிடம் சமர்பிக்கப்பட்டது.
Next Story