ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் : ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கிறது.
81 தொகுதிகளை கொண்டஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து, இரண்டு அணிகளும் மாறி மாறி முன்நிலை பெற்று வந்தன. இருந்த போதிலும் மூன்று சுற்றுகளுக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றிய தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆளும் பாஜக 28 இடங்களையும், மற்ற கட்சிகள் 11 இடங்களையும் பெற்றுள்ளன.
இதனையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்டிலும் பாஜக ஆட்சியை இழந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து தேர்தல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
Next Story