"திமுக பேரணியில் கமல் கட்சி பங்கேற்காது"
"கமல் வெளிநாடு சென்று இருப்பதால் பங்கேற்க முடியாது"
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில், பங்கேற்க மாட்டோம் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. சென்னையில், தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பேரணி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு மக்கள் நீதி மையத்திற்கும் அழைப்பு விடுத்திருந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்போம் என்று கமல் கூறி இருந்தார். இந்த நிலையில், கமல்ஹாசன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்று விட்டதால், மக்கள் நீதி மய்யம், பேரணியில் பங்கேற்காது என்று அக்கட்சி, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Next Story