"மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்"

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாட்டில் பிளவை ஏற்படுத்தி உள்ளதாக சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
குடியுரிமை சட்டத் திருத்த மாசோதாவை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், குடியுரிமை வழங்க மதம் தான் அளவுகோல் என்றால், இந்தியாவின் நிலை என்னாவது என்றார். மசோதாவுக்கு எதிராக எழுந்துள்ள போராட்டம், 2- வது சுதந்திர போராக மாற வாய்ப்புள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத பாஜகவின் ஆட்சி, ஹிட்லரின் ஆட்சி என முத்தரசனும் கண்டனம் தெரிவித்தனர். மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததை கண்டித்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் வீடுகளை முற்றுகையிட உள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார். முஸ்லிம்களை, வெளிப்படையாக மிரட்டி வருவதாக, ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்