"அ.தி.மு.க.வின் கட்சி பணிக்காக தலைமை செயலகம்" - தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் குற்றச்சாட்டு
அ.தி.மு.க.வின் கட்சி பணிக்காக தலைமை செயலகத்தை பயன்படுத்தியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் புகார் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் கட்சி பணிக்காக தலைமை செயலகத்தை பயன்படுத்தியதாக திமுக பொருளாளர் துரைமுருகன் புகார் தெரிவித்துள்ளார். குடியுரிமை மசோதாவை ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. எஸ்.ஆர் . பாலசுப்பிரமணியத்துக்கு, தலைமை செயலகத்திலிருந்து அரசு துணை செயலாளர் ஒருவர் பேசியதாக துரை முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ள துரைமுருகன் , இது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story