"குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள்" - வரும் 18-ஆம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை வரும் 18-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் - வரும் 18-ஆம் தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
x
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக திரிபுரா மகாராஜா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல காங்கிரஸ் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்துள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் கட்சியின் மூத்த தலைவருகளும் மூத்த வழக்கறிஞர்களுமான கபில்சிபில் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் ஆஜராகி இந்த வழக்குகளை விசாரணைக்கு உடனடியாக ஏற்குமாறு முறையிட்டனர். இதைத் தொடர்ந்து வரும் 18-ஆம் தேதியன்று இந்த  மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்