"குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை" - மத்திய அரசு அதிரடி
குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக்கூறி இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என சத்தீஸ்கர், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்துள்ளன.
இதனிடையே பாரதிய ஜனதா கட்சியால் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தும்படி எந்த மாநிலத்தையும் வற்புறுத்த முடியாது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையின் கீழ் மத்திய அரசு சட்டங்களில் வகைப்படுத்தப்பட்டு உள்ளதால் மாநிலங்களால் அதை நிராகரிக்க முடியாது என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story