மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் - ராகுல் காந்தி கருத்து
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் நள்ளிரவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் நள்ளிரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. நாளை மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் ஆக உள்ள நிலையில் நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பது, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையை அசைக்கவும், நொறுக்குவதற்கும் சமம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Next Story