குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியது - மக்களவையில் ஆதரவு - 311, எதிர்ப்பு - 80
காங்., தேசியவாத காங்., டி.ஆர்.எஸ்., பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி எதிர்ப்பு மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு
குடியுரிமை சட்டதிருத்த மசோதா, மக்களவையில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பி.,க்களும், எதிராக 80 பேரும் வாக்களித்தனர். மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தாக்கல் செய்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. 9 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்கு பின், ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு அளித்தது. இந்த மசோதாவுக்கு சிவசேனாவும் ஆதரவளித்துள்ளது.
Next Story