எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் உணவு மானியம் ரத்து
நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுக்கான மானியத்தை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுக்கான மானியத்தை ரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 17 கோடி ரூபாய் மிச்சமாகும். மானியத்தை ரத்து செய்வது தொடர்பான வழிமுறைகளை இறுதி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டதும் இது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Next Story